செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஜூன் 9ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்

அரசாங்கம் மற்றும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டு வரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

பிரதமர் பதவி விலகுவதுடன் அவருக்கு பதவியை வழங்கிய அரசாங்கம் பாராளுமன்றை களைக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.