செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.வி.பியினால் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.
” மக்கள் ஆணைக்கு மதிப்பளி” எனும் தொனிப் பொருளில் புஞ்சி பொரளை சந்தியிலிருந்து புறக்கோட்டை ரயில் நிலையம் வரை நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் கலந்துக்கொண்டிருந்தனர்.
வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்ட மற்றும் 100 நாள் வேலைத்திட்டங்கள் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
001
002
002
003
004