செய்திகள்

அரசாங்கம் நிதி நெருக்கடியில் கடன் பெற்றுக்கொள்ள முயற்சி

அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக திறைச்சேரியிலிருந்த வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் அரசாங்கத்திற்கு சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கடன்களை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் ஆனால் அந்த கடன்களை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலைமையால் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தொடர முடியாது போயுள்ளதுடன் இந்த வருடத்தில் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேகம் 6.9 வீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.