செய்திகள்

அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படுவர்

அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள்  எதிர்வரும் நாட்களில் நியமிக்ப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை மறுதினம் செவ்வாயக்கிழமை இந்த நியமனம் இடம்பெறலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சபைக்கென 10 பேர் நியமிக்கப்படவுள்னர். பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் இணக்கப்பாட்டுடன்  மூன்று பேரையும்  ஜனாதிபதியினால் நியமிக்கப்படும்  ஒருவரையும்  அத்துடன் மேலும் 3 பேரை உளளடக்கியதாகவும் இந்த சபை அமையவுள்ளது.
இதன் பின்னரே சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவ முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.