செய்திகள்

அரசியலமைப்பு நகல் வரைபை எதிர்க்கும் மகிந்த அணி

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பின் நகல் வரைபை எதிர்ப்பதற்கு மகிந்த ஆதரவு அணியினர் திட்டமிட்டுள்ளனர்.
அந்த வரைபு சட்டத்திற்கு முரணான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அரசியலமைப்பு சபை இதுவரை அனுமதி வழங்கியதில்லையெனவும் இவ்வாறான நிலைமையில திருட்டுத் தனமாக அரசியலமைப்பு வரைபை தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இடமளிக்கப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த சபை முதல்வரான லக்‌ஷ்மன் கிரியெல்ல மிக விரைவில் புதிய அரசியலமைப்பின் நகல் வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)