செய்திகள்

அரசியல், ஊழல் விளையாட்டுக்குள் இருக்கக் கூடாது என்கிறார் ரணில்

விளையாட்டுக்குள் ஊழல் மற்றும் அரசியல் இருக்கக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விளையாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பது தொடர்பில், நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

டீ.திஸாநாயக்க தலைவராக உள்ள இந்தக் குழுவில் என்.பத்மநாதன் மற்றும் ரெஸ்லி குஷேன் ஆகியோர் அடங்குகின்றனர். குறித்த குழுவால் அமைச்சில் இடம்பெற்ற 18 மோசடிகள் குறித்த தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.