செய்திகள்

அரசியல் பழிவாங்கல் விசாரணை குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் மனு!

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குவின் பரிந்துரைகள் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை ரத்துச் செய்யுமாறு ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி இந்த மனுமீதான விசாரணை முடிவடையும் வரையில் குறித்த பரிந்துரைகளை செயற்படுத்துவதை இடைநிறுத்துமாறு அவர் நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
-(3)