செய்திகள்

அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, இவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை அரச சேவைகளுக்கான பயிற்சிகளில் 50 ஆயிரம் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.இவர்களை பிரதேச செயலகங்களுக்கு அழைக்கும் போது, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)