செய்திகள்

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகளை நடாத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகளை நடாத்துவதை தவிர்க்குமாறு பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூர்ய வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகள் நடாத்தப்படுவது குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சில நிறுவனங்களில் நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15)