செய்திகள்

அரபிக் கடலில் சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கை – தமிழகத்தில் பலத்த மழை பெய்யும்!

லட்சம் தீவுகள் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலில் தாழமுக்க நிலையொன்று உருவாகியுள்ளது.

இந்த தாழமுக்க நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் வலுவடைந்து சூறாவளியாக மாறலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழக்கத்திலும், இலங்கையிலும் பல பிரதேசங்களில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில பிரதேசங்களில் கடும் மழையுடன் இடி, மின்னலும் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழகத்தில் பல பிரதேசங்களில் பலத்த காற்று வீசும் என்றும் இது தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)