செய்திகள்

அரிப்பு கடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மீட்பு!

சிலாவத்துறை – அரிப்பு கிழக்கு கடற் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 201 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சிலாவத்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95 கஞ்சாப் பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. சிலாவத்துறை பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.