செய்திகள்

அருட்தந்தை அன்புராசா செபமாலையின் “அதிர்வுகள்” நூல் வெளியீடு

யாழ். கொழும்புத்துறையில் அமைந்துள்ள அமலமரித் தியாகிகள் சபையின் குருமட உருவாக்குனரான அருட்தந்தை அன்புராசா செபமாலை அவர்களின் “அதிர்வுகள்” என்ற நூல் கடந்த திங்கட்கிழமை திருமறைக் கலாமன்ற அரங்கில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மானுடவியல் சமுகவியல் உளவியல் மற்றும் அறிவியல் பார்வைகளோடு, தாயகம் பற்றியும் புலம் பெயர் தேசங்களில் எம்மவர்களது வாழ்க்கை முறைமைகள் பற்றியதுமான கணிசமான தகவல்களுடன் வெளிவந்திருக்கும் இந் நூல்  வெளியீடு அடிகளாரின் 8வது நூல்வெளியீடாகும்.

சுவைகள் நிறைந்த கதைகளுடனும் சுவாரஸ்யமான நகைச்சுவைகள், நறுக்கான விவாதங்கள், கேள்வி பதில்கள் மற்றும் உண்மை வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூலின் வெளியீட்டு நிகழ்விற்கு பல அறிஞர்கள் பிரமுகர்கள் துறைசார் நுட்பவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நூலாசிரியர் அருட்தந்தை அன்புராசா அவர்கள், யாழ் மருத்துவமனையின் ஆன்ம குருவாகவும் மறையுரைஞராகவும் கடந்த காலங்களில் பணியாற்றியிருந்ததுடன் பிரான்ஸ் புனித லூர்து அன்னை தேவாலயத்தில் ஆன்மீக குருவாகவும் கடமையாற்றியிருந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கலை இலக்கிய துறையில் ஈடுபாட்டுடன் உழைத்துவரும் இவர் மன்னாரைச் சேர்ந்த  பழம்பெரும் நாட்டுக்கூத்துக் கலைஞர் அண்ணாவியார் குழந்தை அவர்களின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

11083669_438011846360406_9061359361692111954_n

11046445_438009053027352_5759090311123553731_n

1459144_438011749693749_1369930538009218982_n

11081052_438013499693574_4371894323807064469_n

10949763_438013246360266_4299811531843651023_n

10516687_438012123027045_1770279511327868665_n

10422222_438012193027038_2401789584827401454_n

20718_438013773026880_3964937495240149014_n

1960038_438013863026871_1355409239519492627_n