செய்திகள்

அர்ஜுனா மகேந்திரனை ராஜினாமா செய்ய ஜே. வி .பி வலியுறுத்து

மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுனா மகேந்திரன் ராஜினாமா செய்யவேண்டும் என்று ஜே. வி. பி வலியுறுத்தி இருக்கிறது. கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி நடைபெற்ற திறைசேரி பிணை விற்பனையின் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகளை நேர்மையாக விசாரணை செய்ய இடமளிக்கும் வகையிலேயே ஆளுனரை பதவிவிலக கோருவதாக அக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சுனில் ஹன்துன்நெத்தி நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த பிணை விற்பனையில் அர்ஜுணா மகேந்திரனின் மருமகனின் நிறுவனம் முறையற்ற வகையில் தொடர்புபட்டிருப்பது குறித்து சந்தேகங்கள் வெளியிடப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூவர் கொண்ட ஒரு குழுவை அமைத்திருந்தார்.