செய்திகள்

அர்ஜூன் மகேந்திரன் நிதி அமைச்சின் செயலாளராக நியமனம்

பொருளாதார மற்றும் முதலீட்டு நிபுணரான அர்ஜூன் மகேந்திரன் நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜானாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் முன்னாள் தலைவராக இவர் பதவி வகித்தார்.

அத்துடன் எச்.எஸ்.பி வங்கிகளின் முகாமைத்து பணிப்பாளராகவும் இவர் கடமையாற்றியவர். தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியாகவும் பதவி வகித்தவர்.