செய்திகள்

அலரி மாளிகை மக்கள் பார்வைக்காக திறந்துவிடப்படும்: அரசாங்கம் திட்டம்

அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியனவற்றை மக்கள் பார்வையிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாளிகைகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் பூர்த்தியானதன் பின்னர் அடுத்த வாரமளவில் மாளிகைளை மக்கள் பார்வையிட அனுமதியளிக்கப்படும்.

மேலும், நாடு முழுவதிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் பயன்படுத்தப்பட்ட மாளிகைகள் மக்கள் பார்வைக்காக விடப்படும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கண்டி, நுவரேலியா, கதிர்காமம் ஆகிய பகுதிகளில் ஜனாதிபதி மாளிகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றைத் தான் பயன்படுத்தப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிவித்தார்.