செய்திகள்

அலரி மாளிகை முன்பாக பொலிஸார் குவிப்பு: வீதித் தடைகளும் அமைப்பு

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் அமைந்திருக்கும் அலரி மாளிகையைச் சுற்றி பெருந்தொகையான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அவரிமாளிகைப் பகுதியில் வீதித் தடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில், வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணப்படும் இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதை முன்னிட்டு படையினரின் ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களிலும் படையினர் ரோந்து செல்வதைக் காண முடிந்தது.