செய்திகள்

அல்சகாப்பின் தளங்கள் மீது கென்யா விமான தாக்குதல்

சோமலியாவிலுள்ள அல்சகாப் முகாம்கள் மீது கென்யா விமானதாக்குதலை ஆரம்பித்துள்ளது.
கென்யாவின் இராணுவ பேச்சாளர் இதனை உறுதிசெய்துள்ளார்.
சோமாலியாவிலிருந்து கென்யாவிற்குள் வருவதற்கு அல்சகாப் தீவிரவாதிகள் பயன்படுத்தும் கெடோ பகுதியில் உள்ள இரு தளங்கள் மீது கென்யாவின் விமானங்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.
கடந்த வாரம் கெரிசா பல்கலைகழகத்தில் 150 ற்கும் மேற்பட்ட மாணவர்களை அல்சகாப் படுகொலைசெய்ததற்கு பின்னரே கென்யா இந்த விமானதாக்குதலை ஆரம்பித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விமானத்தாக்குதல்கள் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கென்யா ஜனாதிபதி பல்கலைகழக படுகொலைக்கு கடுமையான பதிலடியை கொடுக்கப்பபோவதாக எச்சரித்திருந்தார்.