செய்திகள்

அவசர தேவைகளுக்கு ஈ.பி.எப் நிலுவையிலிருந்து 30 வீதத்தை பெறலாம் : 27ம் திகதி முதல் ஏற்பாடு

தமது  ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து  30 வீதத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட ஏற்பாடொன்றை  மேற்கொள்வதற்கு  தொழில் அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தில் மூன்று இலட்ச ரூபாவுக்கு மேல் பணம் இருக்குமானால் அதில் 30 வீதத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பெற்றுக்கொள்ள இயலும் என  தொழில் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார்.
அவசர நோய்களுக்குச் சிகிச்சை பெறல் , வீட்டை நிர்மாணித்தல் போன்ற அவசரத் தேவைகளுக்கு மட்டுமே இந்த பணத்தொகையை பெற இயலும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆகக்கூடிய தொகையாக இருபது இலட்ச ரூபாவைப் பெற்றுக்கொள்ள இயலும். இதனை மீண்டும் செலுத்தத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.