செய்திகள்

அவுஸ்திரேலிய காட்டுத்தீயால் பெருமளவு பாதிப்பு

காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் அதேவேளை அவுஸ்திரேலியாவின் தென்பகுதியில் காட்டுதீ காரணமாக 30 ற்க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
1983 இல் 75 பேர் கொல்லப்பட காரணமாகவிருந்த காட்டுதீக்கு பின்னர் இதுவே மோசமானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடிலெய்டிற்கு அருகில் உள்ள மலைப்பகுதிகளில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் 800 ற்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அவசர நிலை இன்னமும் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை, தீ பரவிவரும் திசையில் வீடுகளும்,மக்களும் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு படையினர்உட்பட 22 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 1100 ஏக்கரிற்கு மேல் தீயில் கருகியுள்ளது.