செய்திகள்

ஆசிரியர்களின் போராட்டத்தால் கொழும்பில் வாகன நெரிசல்!

தமது சம்பள முரண்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி அதிபர், ஆசிரியர்கள் இன்று வாகனப் பேரணியாக சென்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்புக்கு நுழையும் பிரதான வீதிகளின் வழியாக நாலாப் பக்கம் இருந்தும் பேரணியாக சென்ற ஆசிரியர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடினர்.

இவர்களின் இந்தப் போராட்டத்தால் கோட்டை, புறக்கோட்டை, கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல் நிலவிவருகின்றது.
-(3)