செய்திகள்

ஆசிரியர் கத்தியால் குத்திக் கொலை (படங்கள்)

பொகவந்தலாவை ஆரியபுர பிரதேசத்தில் ஆண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று 20.05.2015 அன்று விடியற்காலை இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் மது போதையில் இருந்த வேளை அவரது சகோதரரின் வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்து வந்த இளைஞன் ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலை செய்யபட்ட நபர்; பொகவந்தலாவ பொகவான தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரயராக பணியற்றி வந்ததாகவும் (19.05.2015) அன்றைய தினம் தமது கடமைகளை முடித்து விட்டு வீடு திரும்பிய குறித்த ஆசிரியர் 20.05.2015 அன்று விடியற்காலை தமது வீட்டில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கபட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த நபர் கொலை செய்யபட்ட வேலை குறித்த நபரும் அவரின் தாயரும் சந்தேக நபரும் வீட்டில் இருந்தாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சடலமாக மீட்கபட்டவர் 45வயது மதிக்கதக்க பி.நவனிதரன் என அடையாளம் காணபட்டுள்ள இதே வேலை மேலதிக விசாரனைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்யபட்டுள்ளதோடு கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 20.05.2015 அன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதாக பொகவந்தலாவ பொலிஸ் பொறுப்பதிகாரி சரத் சமரவீக்கிரம தெரிவித்தார்.

சடலம் பிரதே பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=v3R9b6Y7ENE&feature=youtu.be” width=”500″ height=”300″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=LfdPdq96H-k&feature=youtu.be” width=”500″ height=”300″]

______ ____

IMG_1469

IMG_1473

IMG_1474

IMG_1477

IMG_1478

IMG_1480

IMG_1481

IMG_1486

IMG_1490

IMG_1500

Still0520_00000

Still0520_00003

Still0520_00004