செய்திகள்

ஆசிரியர் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படவிருந்த ஆசிரியர் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மே 10 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் பரீட்சையை நடத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் நாட்டில் கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு காலவரையறை இன்றி பரீட்சையை ஒத்திவைக்க நடவடிக்கையெடுக்கபட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
-(3)