செய்திகள்

ஆதரவளிப்பதாகக் கூறி காலை வாரிவிட்டனர்: லக்‌ஷ்மன் கிரியெல்ல சீற்றம்

திறைசேரி உண்டியல் அனுமதி வழங்குவது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக எதிர்க்கட்சியினர் உறுதிமொழி வழங்கியிருந்த போதும் வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்திருப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோன் செனவிரத்ன ஆகியோர் இப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக உறுதிமொழி வழங்யிருந்தனர்.

நிமல் சிறிபால டி சில்வா வாக்கெடுப்புக் கோரப் பொவதில்லை என தனது உரையில் கூறியிருந்ததுடன், ஜோன் செனவிரத்னவும் வாக்கெடுப்பு கோருவதில்லையெனக் கூறியிருந்தார். இவ்வாறான நிலையிலேயே வாக்கெடுப்பு கோரப்பட்டது. இருந்த போதும் குறித்த பிரேரணையை நிறைவேற்றுவதற்கு மாற்றுவழி எடுக்கப்படும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்ல மேலும் தெரிவித்தார்.