செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 33 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி நகரமான ஜலாலாபாத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு, வங்கி ஒன்றுக்கு அண்மையில் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது, அரச ஊழியர்களும் இராணுவ வீரர்களும் தங்களது ஊதியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நியூ காபூல் பேங்க் என்ற குறித்த வங்கிக்கு வெளியில் காத்திருந்தனர்.
இதேவேளை, ஜலாலாபாத்தில் உள்ள வழிபாட்டுத்தலமொன்றின் அருகிலும் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
_82402662_82402559
குறிப்பிட்ட தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானிற்கான ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளபோதிலும் இதனை உறுதிசெய்ய முடியவில்லை. இந்த தாக்குதலில் பல குழந்தைகளும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கான் ஜனாதிபதி அஸ்ரவ் கானி இந்த தாக்குதலைகோழைத்தனமானது,மிகவும் மோசமானது என வர்ணித்துள்ளதுடன் இதனை தலிபான் அமைப்பினர் மேற்கொள்ளவில்லை,ஐஎஸ் அமைப்பினரே இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட காயமடைந்த பலர் வீழ்ந்துகிடப்பதை பார்த்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.