செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கு சென்ற மாணவிகள் மீது ஆசிட் வீச்சு

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியான ஹெராத் மாகாணத்தில், பள்ளி சென்ற மாணவிகள் மீது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஆசிட் வீசினர்.

ஹெராத் நகரின், கல்வித்துறை தலைவர் அசிஸ்-உல்-ரஹ்மான் சர்வாரி இதுபற்றி கூறுகையில், “16 முதல் 18 வயதுடைய இவர்கள்தான் பள்ளியில் படிக்கும் மிகப்பெரிய மாணவிகள்” என்றார்.
“ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட அந்த மாணவிகள் முதலில் ஹெராத் நகரிலுள்ள நூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அவர்களது பெற்றோர்களே அவர்களை அழைத்துச் சென்றனர்” என மருத்துவமனையின் தலைவர் ஜமால் அப்துல் நசிர் தெரிவித்தார். மேலும், அவர்களில் 2 பேரின் நிலை மோசமாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

மேலும், மாணவிகள் மீது ஆசிட் வீசியது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆண்கள் என்றும், ஆசிட்டை வீசும்போது, “இது பள்ளிக்கு போவதற்கான தண்டனை” என அவர்கள் கூறினர் என்றும், அந்த மாணவிகள் கூறியதாக ஜமால் தெரிவித்தார்.
மாணவிகள் மீது ஆசிட் வீசியவர்களை மிகவும் தீவிரமாக தேடிவவதாக மாகாண காவல்துறை தலைவர் தெரிவித்தார்.