செய்திகள்

“ஆப்ரேசன் ஹம்லா’ வில் இதுவரை 45 பேர் கைது

தமிழக கடலோர பகுதிகளில் “ஆப்ரேசன் ஹம்லா’ என்ற பெயரில் பொலிசார் மேற்கொண்டு வரும் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் நடவடிக்கையில் இது வரை 45 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் -16 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேர், ராமநாதபுரம் மாவட்டம் 12 பேர், மண்டபம், சென்னையில் 12 பேர் பிடிபட்டுள்ளதாக கடலோர காவல் படை கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்துளார்.

தமிழகத்தின் கடலோர கிராமங்கள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும் என்ற அச்சம் உள்ளது. இந்நிலையில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், கடலோரப் பகுதி மக்களும், போலீஸாரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இந்த ஆபரேசன் ஹாம்லா ஒத்திகை நிகழ்த்தப்படுகிறது.