செய்திகள்

ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: ருவான் குணசேகர தெரிவிப்பு

நீதிமன்ற உத்தரவை மதிக்காது லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்த நபர்கள் மீது சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை ஒன்றை சமர்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்ட நிலையில், அதனை மீறி பிக்குகள், அரசியல்வாதிகள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோட்டாபய ராஜபக்ஷவை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.