செய்திகள்

ஆறுமுகன் தொண்டமான் மற்றும் தோட்ட முகாமையாளர்கள் சந்தித்தனர்

கொட்டகலை தோட்ட  கம்பனிக்கு உட்பட்ட மேபீல்ட், ஸ்டோனி க்ளிப் , போகாவத்தை, கிறேக்லி, மௌண்ட் வர்னன்  ஆகிய தோட்டங்களுக்கு விஜயம் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் தோட்ட முகாமையாளர்களுக்கு இடையிலான  சந்திப்பு இடம் பெற்றது.

இதன்போது  தோட்ட தொழிலாளர்கள் புதிதாக வேலைக்கு இணைத்துக்கொள்வது,  தரிசு நிலங்களை அப்பிரதேச தொழிலாளர்களுக்கு சுயத்தொழில் மேற்கொள்ள வழங்குமாறும், நன்கு படித்த இளைஞர் யுவதிகளுக்கு அத்தோட்டக் காரியலயம், தேயிலை தொழிற்சாலை, தோட்ட  வெளிகல உத்தியோகஸ்தர்கள் போன்ற தொழில்களை வழங்குமாறு வலியுருத்தபட்டதோடு, அம்மக்கள் எதிர்கொள்ளும்  அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு பெற்றுகொடுக்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் முன்வைத்த  கோரிக்கைகளுக்கு  தோட்ட முகாமையாளர்கள்  எதிர் வரும் காலங்களில் தீர்வு பெற்று கொடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இச்சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

DSCF7228

DSCF7234

DSCF7220

DSCF7215

DSCF7240