செய்திகள்

ஆலயத் திருவிழாவில் கோஷ்டி மோதல்; 8பேர் படுகாயம் !

வலிகாமம் தெற்கில் உள்ள ஆலயமொன்றின் பூங்காவனத் திருவிழாவன்று இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 8பேர் படுகாயங்களுக்குள்ளாகி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது மதுபோதையில் அங்குவந்த இளைஞர்கள் சிலர் இசை நிகழ்ச்சியை நிறுத்துமாறு கோரிக் கூச்சலிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கூடிய இளைஞர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டனர்.

இதனையடுத்து இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, அங்கு வந்த பொலிஸார், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்தனர்.