செய்திகள்

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு புதிய சட்டம்

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு புதிய சட்டங்களை கொண்டு வரப்போவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் அபாட் அறிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் தீவிரவாதிகளுடன் இணைந்து போரிடுபவர்கள் நாட்டினுள் நுழைய முடியாது எனவும், ஆஸ்திரேலியாவில் இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால், அவர்களது ஆஸ்திரேலியக் குடியுரிமையை தானாகவே ரத்து செய்யப்படும் வகையில் 2007ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆஸ்திரேலியக் குடியுரிமைச் சட்டத்தில் மாறுதல் கொண்டுவரப்படும் எனவும் கூறியுள்ளார்.