செய்திகள்

இங்கிலாந்தின் உலககிண்ண கனவுகளுக்கு முடிவு கட்டிய சதம்

இங்கிலாந்து அணியின்உலக கிண்ண கனவுகளுக்கு முதல்சுற்றிலேயே முடிவு கட்டிய சதத்தை பெற்ற மஹ்மதுல்லாவின் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் பங்களாதேஸ் அணியின் வரலாற்றிற்கும் ஓற்றுமைகள் உண்டு.அணியை போல இவரும் அதிகளவு குற்றச்சாட்டுகளை சந்தித்த அதேவேளை பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஓருவராகவும் காணப்பட்டார்.மஹ்மதுல்லா கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட ஓருவர்.பங்காளதேஸ் கிரிக்கெட் உலகம் அவர்மீது வைத்த நம்பிக்கையை பல தடவை சோதித்தவர், சிறிது அதிஸ்டக்காரன்.தனது உடல் பருமனை குறைப்பதற்கு இரண்டு வருடங்கள் முயற்சி செய்தார், இறுதியில் உலககிண்ணப்போட்டிகளில் முதலாவது சதத்தை பெற்ற பங்காளதேஸ் வீரர் என்ற பெருமை அவரிற்கு கிடைத்துள்ளது.மிக முக்கியமான தருணத்தில் அதிக ஒட்டங்களை பெறவேண்டிய துடுப்பாட்ட வீரருக்கு அந்த பெருமை கிடைத்துள்ளது 208103

பங்காளதேஸ் வீரர்கள் பலர் தாங்கள் அந்த பெருமையை பெற விரும்புவதாக பகிரங்கமாக தெரிவித்து வந்துள்ளனர்.தமீம் இக்பால் ஸ்கொட்லாந்திற்கு எதிரான போட்டியில் 5 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டார்.அனாமுல் ஹக் காயங்கள் காரணமாக அணியிலிருந்து விலகினார்,முஸ்பிகூர் ரஹீம் தற்போது துடுப்பாட்டத்திற்கான தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.சகீப் உலகின் தற்போதைய தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான தரவரிசையில் முதலில் இருப்பவர்.

இதன் காரணமாக ஏனைய வீரர்களை விட மஹ்துல்லாவிற்கே தன்னை நிரூபிக்கவேண்டிய தேவை அதிகமான காணப்பட்டது.அணி எட்டு ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்களை இழந்திருந்த தருணத்தில் ஆடவைந்த அவர் ஆன்டர்சன் , புரோட் இருவரையும் சிறப்பாக எதிர்கொண்டார்.எதிர்முனையில் விளையாடிக்கொண்டிருந்த சர்க்கார் போன்ற இளம் வீரரை சிறப்பாக வழிநடத்தினார், இருவரும் இணைந்து 86 ஓட்டங்களை பெற்றனர்.சகீப் அல்ஹசன் வேகமாக ஆட்டமிழந்தால் பங்களாதேஸ் அணியின் தோல்வி உறுதியாகிவிடும் என தெரிவிக்கப்படுவது வழமை,எனினும் மஹமதுல்லா அதனை இன்று பொய்யாக்கினார்.ஐந்தாவது விக்கெட்டிற்காக முஸ்பிகூர் ரஹீம் உடன் இணைந்து 14 ஓட்டங்களை பெற்றார்.தனது 50 ஓட்டங்களை 69 பந்துகளில் பெற்ற அவர்,அடுத்த 62 பந்துகளில் சதத்தை பெற்றார். அவர் 138 பந்துகளில்103 ஓட்டங்களை பெற்றார்.அவர் நீண்ட நாள் கண்ட கனவிது.எனினும் சதத்தை பெற்றதும் களைத்தவர் போல காணப்பட்டார். இங்கிலாந்து அணிக்கு அவர் ஓன்றும் புதியவரல்ல,2011 உலக கோப்பையில் இங்கிலாந்திற்கு எதிராக பங்களாதேஸ் வெற்றிபெற்றவேளை களத்திலிருந்தவர்.எனினும் அவர் அவ்வேளை பின்வரிசை ஆட்டக்காரராக காணப்பட்டார்.

இறுதியாக அவரது முகத்தில் சிரிப்பை காணமுடிந்தது அவர் அணியை 2012 இல் மேற்கிந்திய தீவிற்கு எதிராக தொடர்வெற்றிக்கு அழைத்துச்சென்ற வேளை. மேற்கிந்திய அணிக்கு எதிராகவே 2014 இல் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினார்.சிம்பாப்வேயிற்கு எதிரான தொடரில் இரு அரைச்சதங்களை பெற்றார்.2015 உலக கிண்ணப்போட்டிகளில் ஸ்கொட்லாந்திற்கு எதிராக சிறப்பாக விளையாடினார்.
எனினும் இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அவர் சிறப்பாக விளையாடவில்லை.அவரது சராசரிகள் மிகவும் குறைவாக காணப்பட்டன. அணியின் உபதலைவராக நியமிக்கப்பட்டு ஓரு வருடத்திற்குள் அவரிடமிருந்து அந்த பதவி பறிக்கப்பட்டது. ஓரு முறை அணியிலிருந்து நீக்கப்பட்டார். முன்னாள் அணித்தலைவர் முஸ்பிகூர் ரஹீமிற்கு நெருக்கமானவர் என்ற கருத்தும் காணப்பட்டது.பங்காளதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் கூட ஒரு முறை இவர் விடயத்தில் பொறுமையிழந்தார்.ஆசியாகிண்ணத்திற்கு முன்னர் இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டது, முஸ்பிகூரிற்கு சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
அணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக இவர் மீண்டும் அழைக்கப்பட்டார்,எனினும் அதன் பின்னரும் சிறப்பாக விளையாடவில்லை.208163

எனினும் பங்காளாதேஸ் கிரிக்கெட் தன் மீது வைத்த நம்பிக்கையை நிரூபித்தார். கடந்த செப்டம்பரில் மேற்கிந்திய அணிக்கு எதிராக பங்காளதேஸ் தடுமாறிக்கொண்டிருந்த வேளை அரைசதத்தை பெற்றார். எனினும் அரைசதத்தை பெற்றவுடன் அடித்து ஆட முயன்றார், எனினும் அவர் கொடுத்த வாய்ப்பை மேற்கிந்திய அணி தவறவிட்டதால் இன்னமும் சிறிதுநேரம் விளையாடினார்.
இதன் பின்னர் தனது உடல்எடையை குறைத்தார். அவர் உணர்ச்சிவசப்படாதவர் அல்ல உள்ளுர் போட்டியொன்றில்  சதம் அடித்த பின்னர் அணிநிர்வாகத்தை நோக்கி சைகைசெய்த விதத்திற்காக மூன்று மாதங்கள் விiயாடுவதற்கான தடையை எதிhகொண்டார்.
இந்த வெற்றியுடன் பங்காதேஸ் தன்மீது

வைத்திருந்த நம்பிக்கையை 

அவர் திரும்பிசெலுத்தியுள்ளார்.அதேபோன்று கிரி;க்கெட் உலகம் தன்மீது வைத்திருந்த நம்பிக்கையை பங்களாதேஸ்  திருப்பி செலுத்தியுள்ளது.

 

 

.