செய்திகள்

இங்கிலாந்தின் திரிபடைந்த கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இலங்கையின் பல பகுதிகளில் கண்டுபிடிப்பு

திரிபடைந்த அல்பா கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் இலங்கையில் கண்டுபிடிப்பு இங்கிலாந்தின் திரிபடைந்த கொவிட் வைரஸால்(B117 -அல்பா) பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளர்கள் இலங்கையின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.பெறப்பட்ட உயிரியல் மாதிரிகளின் படி, பாதிப்புற்ற நோயாளர்கள் மட்டக்களப்பு,திருகோணமலை, குளியாப்பிட்டி, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமஹராம, கராப்பிட்டி மற்றும் ராகம ஆகிய பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தன பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இதேநேரம், பி 1.617.2, வைரஸின் இந்திய மாறுபாடு  வஸ்கடுவையில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.மேலும் B.1.411 புதிய மாறுபாடு திஸ்ஸமஹாராமவிலிருந்து பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தனது குழு நடத்திய ஆய்வில் இந்த விடயங்கள் குறித்து தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.(15)