செய்திகள்

இங்கிலாந்தில் ஒழுக்கம் மீறிய இலங்கை வீரர்களுக்கு போட்டித் தடை!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போது கொவிட் கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் சுற்றித்திரிந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மூவருக்கும் போட்டித் தடை மற்றும் அபராதம் விதிக்க அது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

தனுஸ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்திஸ் இன்று (29) குறித்த குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தனர்.

இதன்போது, நிரோஷன் திக்வெல்லவிற்கு 18 மாத கிரிக்கெட் தடையும் தனுஷ்க குணதிலக மற்றும் குசல் மென்திஸ்க்கு எதிராக 24 மாத கிரிக்கெட் தடையும் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மூவருக்கும் தலா 25 ஆயிரம் டொலர்கள் வீதம் அபராதமாக விதிக்குமாறு குறித்த குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-(3)