செய்திகள்

இங்கிலாந்தில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 6,238- பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 45,06,016- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 823 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி 6,397- பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் தொற்று பாதிப்பு அந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு ஒரே வாரத்தில் 76 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டதாக கூறப்படும் டெல்டா வகை கொரோனா பரவலால் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், அந்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பதில் மேலும் தாமதம் ஏற்படலாம் எனத்தெரிகிறது. (15)