செய்திகள்

இந்தியாவிடமிருந்து நூறு மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதிகளை வழங்குவதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது

நூறு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் வசதிகளை வழங்குவதற்கான உடன்படிக்கை ஒன்று இன்று கைச்சாத்திடப்பட்டது.சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்துக்கு அமைய, சூரியக்கல மின்சக்தி துறையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இலங்கை அரசாங்கம் மற்றும் இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆகிய தரப்புக்களால் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.இதன்போது மின்சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகலவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் இந்த உடன்படிக்கை பரிமாறிக்கொள்ளப்பட்டது.(15)