செய்திகள்

இந்தியாவிலிருந்து 65 அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர்: டி.எம்.சுவாமிநாதன் தகவல்

நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவியபோது, தென்னிந்தியாவிற்கு சென்று, அங்கு தங்கியிருந்த 65 இலங்கையர்கள் இன்று செவ்வாக்கிழமை நாடு திரும்பவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அகதி முகாம்களில் பல வருடங்களாக வாழ்ந்தவர்களே இன்று நாடு திரும்பவுள்ளனர்.

இலங்கையர்கள் இரண்டு விமானங்களில் இன்று முற்பகல் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த இவர்கள், சொந்த இடங்களிலேயே குடியமர்த்தப்படவுள்ளனர்.