செய்திகள்

இந்தியா -இலங்கை அணுசக்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்து

இலங்கை சீனாவில் சார்ந்திருக்கும் நிலைமையை குறைக்கும் ஒரு உத்தியாக இந்தியா இலங்கையுடன் பொதுமக்கள் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றில் இன்று கைச்சாத்திட் டுள்ளது.

இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை தனது சக்தி தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவளை , இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மூடி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையின் மற்றொரு வெளிப்பாடு இது என்று தெரிவித்ததுடன் இலங்கை இந்தியாவின் மிக நெருங்கிய அயல் நாடும் நட்பு நாடும் என்று என்று குறிப்பிட்டார்.

இரு நாடுகளினதும் எதிர்காலம் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்றும் அவற்றின் பாதுகாப்பும் செழிப்பும் பிரிக்கமுடியாதவை என்று தான் நம்புவதாகவும் மோடி தெரிவித்தார்.