செய்திகள்

இந்தியா உன்னிப்பாக அவதானிக்கவேண்டிய தேர்தல் என்கிறது ஓப்சேவர் ரிசேர்ச் பவுண்டேஷன்

இந்தியா உன்னிப்பாக அவதானிக்கவேண்டிய தேர்தல் இலங்கையில் நடைபெறவுள்ளதாக புதுடில்லியை தளமாககொண்ட ஓப்சேவர் ரிசேர்ச் பவுண்டேஷன் என்ற ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அயலில் நடைபெறும் தேர்தல் என்பது இந்தியா எந்தவகையிலும் தவறவிடமுடியாத விடயம். இரண்டு வருடங்களுக்கு முன்னதாக, நடைபெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் என்பது இந்தியாவின் கவனத்தை மிக அதிகளவில் ஈர்க்கவேண்டிய விடயமாகும். இலங்கையில் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து அரசியல் ரீதியிலான முட்டுக்கட்டை நிலைதோன்றும் பட்சத்தில், இந்தியா அரசியல் ரீதியிலோ அல்லது இராணுவரீதியிலோ தலையிடாது.
அதேவேளை அவ்வாறான ஓரு சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனை பயன்படுத்தி உள்நோக்கம் கொண்ட சர்வதேசசக்திகள் இலங்கை விவகாரத்தில் தலையிடுவதை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியுமா அல்லது இந்தியா கட்டுப்படுத்த வேண்டுமா என்பது முக்கியமான கேள்வி? இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக தோற்றம் உருவாகத வரையில் இந்தியா அதனை எவ்வாறு செய்வது என்பது அடுத்தகேள்வி? ஜெனீவா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது இந்தியா வெளிப்படுத்திய இறமை குறித்த கரிசனைகள் இந்த விடயத்தில் வழிகாட்டவேண்டும். இலங்கை ஜனாதிபதி தேர்தல்கள் தமிழ்நாட்டில் ஏற்படுத்த கூடிய தாக்கம குறித்தும் இந்தியா சிந்திக்கவேண்டும். இலங்கை தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும், இந்தியாவிற்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றன,
மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றால் இது அதிகமாக காணப்படு;ம்  என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.