செய்திகள்

இந்தியா – பங்களாதேஸ் டெஸ்ட் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தம்

நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 107 ரன்களை எடுத்துள்ளது. ஷிகர் தவன், முரளி விஜய் களத்தில் இருந்தனர். விராட் கோலி முழுநேர டெஸ்ட் போட்டி அணித்தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது போட்டி இதுவாகும்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்தது. ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்தியா இந்த முடிவை எடுத்து.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய், ஷிகர் தவன் இருவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷிகர் தவன், ஒரு நாள் போட்டியைப் போலவே ஓட்டங்கள் எடுப்பதில் ஈடுபட்டார். மறுமுனையில் விஜய், டெஸ்ட் நிதானத்துடன் ஆடினார்.

11 ஓவர்களில் இந்திய அணி 50 ஓட்டங்களை கடந்தது. ஷிகர் தவன் 47 பந்துகளில் அரை சதம் எடுத்தார். ஆனால், இந்திய அணியின் ஆட்டம் 24-வது ஓவரில் மழையால் தடைபட்டது.