செய்திகள்

இந்தியா பயணமானார் சரத் பொன்சேகா: ‘றோ’வுடனும் பேச்சு நடத்துவார்

முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா மூன்று நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, இந்திய உளவு பிரிவான றோ அமைப்பின் முக்கியதஸ்கர்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷல் பதவிக்கு நியமிக்கப்பட உள்ள ஜெனரல் சரத் பொன்சேகா, இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றே இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஜெனரல் பொன்சேகா, தனது இந்திய விஜயத்தின் போது, இந்தியாவின் பிரதான அரசியல்வாதிகள் சிலரை சந்திக்க உள்ளார். அத்துடன் இந்தியாவின் உளவு அமைப்பான றோ அமைப்பின் உயர் அதிகாரிகளையும் பொன்சேகா சந்திக்க உள்ளார். இந்திய உளவுப் பிரிவின் இலங்கைக்கான முன்னாள் பிரதானியாக இருந்த பிரபாமூர்த்தி, பொன்சேகாவின் இந்திய விஜயத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.