செய்திகள்

இந்தியா – பாக்கிஸ்தானிடையே நடைபெற்ற இன்றை போட்டியிலிருந்து

உணர்ச்சி வசப்பட்ட சொகைல் கான்
செப்டம்பர் 2011 இற்கு பின்னர் தனது முதலாவது போட்டியில் விளையாடும் சொகைல் கான் தனது முதல் பந்திலேயே சிகார் தவானை எல்பி டபிள்ய+ முறையில் ஆட்டமிழக்கச்செய்து விட்டதாக நினைத்தார்.அவரது முறையீடு நிராகரிக்கப்பட்டது.எனினும் அவர் டிஆர்எஸ் முறையினை பயன்படுத்த விரும்பினார்,எனினும் அதனை ஏற்க மறுத்த அணித்தலைவர் மிஸ்பாவுல் ஹக் அவரது வேகப்பந்துவீச்சாளரை சமாதானப்படுத்தினார்.ரீப்;ளேயில் பந்து துடுப்பில் பட்டது தெளிவாக தெரிந்தது.அதற்கு இரு பந்துகளின் பின்னர் உணர்ச்சிவசப்பட்ட அவர் தவானுடன் வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டார்.இன்றை போட்டியில் சொகைல் ஹான் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

யசீரின் முயற்சி
துடுப்பெடுத்தாட களத்தில் நுழைந்த விராட் கோலி அப்ரிடியின் பந்தை புல் செய்தார்,பந்து டீப்மிட்விக்கெட் திசையில் மேலெழும்பியது.யசீர் லொங்ஓன் திசையிலிருந்து ஓடி வந்தார்,நிலத்தில் பாய்ந்து பந்தை பிடிக்க முயன்றார், எனினும் பந்து அவரது கையலிருந்து நழுவியது,மீண்டும் பிடித்தார், மீண்டும் நழுவி விழுந்தது. தனது அபாரமுயற்சியினால் சாத்தியமற்ற கட்சினை கிட்டத்தட்ட சாத்தியமாக்கினார், அவர் அதில் வெற்றிபெற்றிருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும்.
கோட்டை விட்ட அக்மல்
யசீர் கோலியை தவறவிட்டபோது சிரித்த அக்மல் தானே கோலியை மீண்டும் தவறவிட்டார்.கோலி அவ்வேளை 76 ஓட்டங்களை பெற்றிருந்தார். பகுதி நேர சுழற்பந்துவீச்சாளர்,ஹரிஸ் சொகைலின் பந்து சுழன்று கோலியின் துடுப்பில்பட்டுவிட்டு விக்கெட்காப்பாளர் அக்மலின் கையில் பட்டு நிலத்தில் விழுந்தது.
இரு தடவை தப்பிய ஜடேஜா
49 ஓவரில் ஜடேஜா எக்ஸ்டிரா கவர் திசையை நோக்கி பந்தை அடித்தார்.டோனி உடனடியாக ஓடத்தொடங்கினார்,அதனால் ஜடேஜாவும் ஓடவேண்டிய நிலைககு தள்ளப்பட்டார்,அப்ரிடியின் எறி விக்கெட்டில்; படாமல் குறிதவறியவேளை ஐடோஜா விககெட்டிற்கு அருகில் வரவில்லை.அந்த பந்தை எடுத்த யசீர் மீண்டும் எறிந்தார் இம்முறையும் ஜடேஜா தப்பினார்.