செய்திகள்

இந்தியா- வங்காள தேசம் இடையிலான பதுல்லா டெஸ்ட் டிராவில் முடிந்தது

இந்தியா- வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான பதுல்லா டெஸ்ட் மழைக் காரணமாக வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இந்தியா- வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பதுல்லாவில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வென்று முதலில்துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 462 ஓட்டங்களை குவித்து டிக்ளேர் செய்தது. தவான் (173) விஜய் (150) சதம் அடித்து அசத்தினர்.

பின்னர் வங்காள தேசம் துடுப்பெடுத்தாதொடங்கியது. முதல் நாளில் இருந்தே மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் வங்காளதேசம் முதல் இன்னிங்சை முடிக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

அந்த அணி 4-வது நாளான நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இன்று ஐந்தாவது நாள் ஆட்டமும் மழையால் தாமதமாக தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய வங்காள தேசம் அணி 256 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து பாலோ ஆன் ஆனது.

வங்கதேசத்தை பாலோ-ஆன் செய்யுமாறு கோலி கேட்டுக்கொண்டதையடுத்து அந்த அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தமீம் இக்பால் அம்ருல் கெய்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் என்பதால் குறைந்தது 27 ஓவர்கள் வீச முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் வங்காள தேசம் 15 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்களை எடுத்தது. இதனால் போட்டி முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாததால் இரண்டு அணி அணித்தலைவர்களும் போட்டியை முடித்துக்கொள்ள சம்மதித்தனர்.