செய்திகள்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வர விரும்பியது இல்லை: டிராவிட்

இந்திய கிரிக்கெட் வாரியம் யாரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்போகிறது என்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். தெண்டுல்கர், கங்குலி, லஷ்மண் இந்திய அணியின் ஆலோசகர் குழுவில் இடம்பெற்றதால் டிராவிட்டுக்கு அந்த பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியா கிரிக்கெட்டின் ‘ஏ’ அணி மற்றும் 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கான பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சாளர் பதவி டிராவிட்டுக்கு இல்லை என்பது உறுதியானது.

இதற்கிடையே சமீபகாலமாக இந்திய அணியின் டைரக்டராக செயல்பட்ட ரவி சாஸ்திரி வங்காள தேச தொடருக்கான இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் உலகிலேயே அதிக அளவிலான சம்பளத்தில் (வருடத்திற்கு ரூ. 7 கோடி) ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதேசமயம், டிராவிட் அந்த இடத்திற்கு வர விரும்வுவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த டிராவிட்டிடம், தலைமை பயிற்சியாளராக வர விரும்புகிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு டிராவிட் கூறியதாவது:-
இதற்கு டிராவிட் கூறியதாவது:-

தலைமை பயிற்சியாளராக வர விரும்பியது இல்லை. நான் இந்தியா ‘ஏ’ மற்றும் 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கான பயிற்சியாளர் பதவியை மட்டும்தான் எதிர்பார்த்திருந்தேன். இந்திய அணியின் பயிற்சியாளர் பற்றி நான் நினைக்கவில்லை.

ரவி சாஸ்திரி மற்றும் அவரது அணியினரும் இந்தியாவிற்கு சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்த சமயத்தில் நான் அந்த இடத்திற்கு வருவதற்கு விரும்பவில்லை. ஒவ்வொரு வீரர்களும் இந்திய ‘ஏ’ மற்றும் 19 வயதிற்குட்பட்டோர் அணியில் இடம்பெற விரும்புவார்கள். அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த வேலை என்னிடம் கொடுத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டு அல்லது மூன்று தொடர்களில் நான் என்னுடைய அனுபவங்களை வீரர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.