செய்திகள்

இந்திய –இலங்கை மீனவர்கள் இன்று பேச்சுவார்த்தை

இந்­திய மற்றும் இலங்கை மீன­வர்கள் இடை­யே­யான 3ஆம் கட்ட பேச்­சு­வார்த்தை இன்று 24 ஆம் திகதி சென்­னையில் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­திய மற்றும் இலங்கை கடல் பகு­தியில் இரு நாட்டு மீன­வர்­க­ளி­டையே நிலவி வரும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வித­மாக இரு­நாட்டு அர­சு­களின் ஏற்­பாட்டில் இரு­நாட்டு மீனவ பிர­தி­நி­தி­க­ளி­டையே பேச்சு வார்த்தை நடை­பெற்று வரு­கி­றது.

சென்­னையில் கடந்த ஆண்டு ஜன­வரி 27ஆம் திகதி முதல்­கட்ட பேச்­சு­வார்த்தை யும், மே 12ஆம் திகதி கொழும்பில் 2ஆம் கட்ட பேச்­சு­வார்த்­தையும் நடை­பெற்றன. 3ஆம் கட்ட பேச்­சு­வார்த்­தையை மார்ச் 24ஆம் திகதி சென்­னையில் நடத்த வேண் டும் என்று மத்­திய அர­சுக்கு தமி­ழக அரசு கோரிக்கை விடுத்­தி­ருந்­தது.

இதை ஏற்­றுக்­கொண்ட மத்­திய அரசும், இலங்கை அரசும் சென்னை பேச்­சு­வார்த்­தையில் பங்­கேற்க ஒப்­புக்­கொண்­டுள்­ளன. இதைத் தொடர்ந்து இலங்கை அரசு உய­ர­தி­கா­ரி­க­ளுடன் மீனவர் சங்கத் தலை­வர்கள் 10 பேர் சென்னை செல்­கின்­றனர்.

தேனாம்­பேட்­டையில் உள்ள மீன்­வளத்­ துறை அலு­வ­ல­கத்தில் இன்று பேச்­சுவார்த்தை நடை­பெற இருப்­பதை தமிழ் ­நாடு மீன்­வ­ளத்­துறை அமைச்சர் அலு­வ­ல­கமும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதில் தமி­ழகம் மற்றும் புதுச்­சேரி அரசு உய­ர­தி­கா­ரிகள், மீனவ பஞ்­சா­யத்து தலை­வர்கள் ஆகியோர் பங்­கேற்று, இரு நாட்டு மீனவர் இடையேயான நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் விதமாக பேச்சு நடத்த உள்ளனர்.