செய்திகள்

இந்திய மீன்பிடி இழுவை படகுகளின் ஆக்கிரமிப்பு முல்லைத்தீவு கடற்பரப்பில்பிலும் வியாபித்துள்ளதாக மீனவர்கள் கவலை

இந்திய மீன்பிடி இழுவை படகுகளின் ஆக்கிரமிப்பு முல்லைத்தீவு கடற்பரப்பில்பிலும் வியாபித்துள்ளது குறிப்பாக கடந்த சில நாட்களாக இந்தியாவிலிருந்து வருகை தரும் மீன்பிடி டோலர் படகுகள் உள்ளுர் மீனவர்களின் வலைகளை சேதப்படுத்திய சம்பவங்கள் பதிவாகி வருவதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் தாமே நேரடியாக கடலுக்குச் சென்று அவர்களை கட்டுப்படுத்த வேண்டி நேரிடும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.தமது பெறுமதிமிக்க வலைகளை இந்திய இழுவைப் படகுகள் அழித்து துண்டாடி வருவதாகவும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இது தொடர்பாக முறையிட்டும் இதுவரையில் பலன் கிடைக்கவில்லை என மீனவர்கள் அதிர்ப்தி தெரிவித்துள்ளனர்.(15)