செய்திகள்

இந்திய லெஜண்ட்ஸ் இறுதிப் போட்டிக்கு தெரிவு: அரையிறுதியில் இலங்கை – தென்னாபிரிக்கா இன்று மோதல்

இந்தியாவின் நடைபெற்றுவரும் வீதிப் பாதுகாப்பு ரி-20 உலக சுற்று கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு இந்திய லெஜண்ட்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.
நேற்று (17) நடந்த அரையிறுதியில் மேற்கிந்திய தீவு அணியை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிகொண்டது.

முதலில் துடுப்பாட்டத்தை செய்த இந்திய லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 218 ஓட்டங்கள் எடுத்தது. கேப்டன் சச்சின் டெண்டுல்கர் 65 ஓட்டங்களுடனும், யுவராஜ் சிங் 49 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பதிலுக்கு விளையாடிய மேற்கிந்திய தீவுகள் லெஜண்ட்ஸ் அணியை இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய போது, 206 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதற்கிடையில், வீதி பாதுகாப்பு உலக தொடர் கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது அரையிறுதி போட்டி இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கும், தென்னாப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணிக்கும் இடையில் இன்று (18) நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் வெல்லும் அணி ஞாயிற்றுக்கிழமை (21) மும்பையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் அணியுடன் விளையாடும்.

-(3)