செய்திகள்

இந்து சமுத்திரத்தில் நிகழும் சுவாரஸ்சியமான கடல் போட்டி

தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளை மீறி சீனாவின் போர்ட் சிட்டி திட்டத்திற்கு இலங்கையின் புதிய அரசாங்கம் அனுமதியளித்துள்ளமை, பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் எனும் நிழல் எவ்வளவு தூரம் படர்ந்துள்ளது என்பதை புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க முனையும் நாடுகளால் கூட அதனை செயற்படுத்த முடியாமலுள்ளது.

மேலும் போர்ட் சிட்டி தொடர்பாக சீனாவிற்கு காட்டப்பட்டுள்ள இந்த சமிக்ஞை அந்த நாடு இந்து சமுத்திரத்தில் கடலோர நிலையங்களை ஏற்படுத்துவதில் எவ்வளவு தூரம் உறுதியாகவுள்ளது என்பதையும் புலப்படுத்தியுள்ளது.

SRI LANKA-ELECTIONஇலங்கையின் புதிய ஜனாதிபதி தனது தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளை கைவிட்டு போர்ட் சிட்டி திட்டத்திற்கு பச்சைகொடி காட்டியமை பலரை ஆச்சரியத்திலாழ்த்தியுள்ளது. அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை சீனாவின் இலங்கையுடனான அதிகரித்து வரும் நட்புறவிற்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவு என பலர் கருதினர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மெல்ல மெல்ல இலங்கையை சீனாவிற்கு நெருக்கமாக்கியிருந்தார்.  கடந்த மாதம் இலங்கையின் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் அதன் அதிகாரிகள் போர்ட் சிட்டி திட்டத்தினால் உருவாக கூடிய பாதுகாப்பு நெருக்கடிகள் குறித்து கவலை வெளியிட்டிருந்தனர்.
.
எனினும் பதவியேற்று சில வாரங்களில் சிறிசேன இந்த திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளார். அவரது அதிகாரிகள் சீனாவுடன் புரிந்துணர்வின்மை ஏற்படுவதை தவிர்ப்பதற்காவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். (இந்த விவகாரத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் இலங்கை பிரதமர் பாராளுமன்றத்தில் போர்ட் சிட்டி திட்டத்திற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார், எனினும் சிசிசிசி நிறுவனம் தனது திட்டம் தொடரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கொழும்பு போர்ட்சிட்டி என்பது வெறுமனே ஆழமான துறைமுகமோ அல்லது கோல்வ் மைதானமோ,இல்லை என்பது முக்கியமானது. அது தற்போதைய சீனா அரசாங்கத்தின் வெளிவிவகார முன்முயற்சிகளில் ஓரு பகுதி. தனது அயல் நாடுகளுடன் சகல வகையான உறவுகளையும், தொடர்புகளையும் வலுப்படுத்துவதற்கான திட்டமே போர்ட் சிட்டி.

China 1

இந்த வெளிவிவகார கொள்கையில் சீனாவிற்கும்,மத்திய ஆசியாவிற்கும், மத்திய கிழக்கிற்கும் இடையில், புதிய வீதிகள், புகையிரத பாதைகளை அமைக்கும் திட்டம் முக்கியமாக காணப்படுகின்றது. இதுவே புதிய பட்டுப்பாதை திட்டம் என வர்ணிக்கப்படுகின்றது.

சீனாவிடம் இன்னொரு முக்கியமான திட்டமுள்ளது. சீனாவையும் அதற்கு மிக முக்கியமானதாக மாறிவரும் இந்துசமுத்திர பிராந்தியத்தையும் இணைக்கும் விதத்தில் அது வர்த்தக துறைமுகங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

சீனா எரிபொருள் வளங்களுக்காக மத்திய கிழக்கையும்,ஆபிரிக்காவையும் அதிகளவிற்கு நம்பியுள்ளது. அதன் காரணமாக அப்பகுதிக்கான முக்கிய கடல் பாதைகளை பாதுகாப்பது குறித்து அது கவலை கொண்டுள்ளது. எனினும் இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை அதிகரிப்பதற்காக சீனா மேற்கொண்டுள்ள முயற்சிகள் பிராந்திய நாடுகளை அச்சத்திலாழ்த்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவை,கடந்த வருடம் இலங்கை துறைமுகத்திற்கு சீனா நீர்மூழ்கிகள் வருகை தந்தமை புதுடில்லியை சீற்றமடையச்செய்தது.

New Silk Roadசீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டம் என்பது இந்திய துணைக்கண்டத்தை முற்றுகையிடும் ஒரு திட்டம் என்றே பல இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தென்சீனா கடலில் சீனா தனது அயல் நாடுகளை கவர்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டிருந்தது.

தற்போது இலங்கை , பாக்கிஸ்தான், மாலைதீவு உட்பட பல நாடுகளில் சீனாவின் முதலீடுகள் அதிகரிப்பதை அமெரிக்கா உன்னிப்பாக அவதானிக்கின்றது. சீனாவின் இந்த முதலீடுகள் பிராந்தியத்தில் அதன் பொருளாதார,இராஜதந்திர மற்றும் இராணுவ வல்லமைகளை அதிகரிக்ககூடியவை.

இந்து சமுத்திரத்தில் சுவாரஸ்யமான கடல் போட்டியொன்று இடம்பெறுகின்றது. அதில் இந்தியாஅமெரிக்கா மற்றும் வாசிங்டன் ஆகியவை சம்பந்தப்பட்டுள்ளன என்கிறார் அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரி அட்மிரல் கரி ரவ்கெட். நாங்கள் இதனை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் என்கிறார் அவர்.

சீனாவை பொறுத்தவரையில் அதன் புதிய பட்டுப்பாதை திட்டம் என்பது முற்றுமுழுதாக பொருளாதார அபிவிருத்தி சார்ந்த விடயம். சீனா அதன் மூலமாக தனக்கும் தென் கிழக்கு ஆசியாவிற்கும் பொருளாதார நலன்கள் கிடைக்கும் என தெரிவித்துவருகின்றது.

துறைமுகங்களை அமைப்பது, பிராந்தியம் முழுவதும் வர்த்தகத்தை ஊக்குவிக்கும். அதேவேளை துறைமுகங்கள் அமைக்கப்படும் நாடுகளுக்கும் குறுகிய கால பொருளாதார நன்மைகளையும் கொண்டுவரும் எனவும் தெரிவித்து வரும் சீனா, இலங்கையின் போர்ட்சிட்டி துறைமுக திட்டத்தினால் அந்த நாட்டிற்கு 13 பில்லியன்கிடைக்கும் எனவும் தெரிவிக்கின்றது.

போர்ட் சிட்டி வெறுமனே பொருளாதரா நோக்கங்களை மையமாக கொண்டதா?

Colombo-Port-city

எனினும் இது முற்றுமுழுதாக டொலர் தொடர்புபட்ட விடயமல்ல. தனது செல்வாக்கை பிராந்தியத்தில் அதிகரித்து புதிய நண்பர்களை பெறுவதற்கு இது சீனாவிற்கு உதவுகின்றது. சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் கேந்திரநோக்கமொன்றுள்ளது என நான் கருதுகிறேன். சீனாவின் அபிவிருத்தி திட்டங்களும், முதலீடுகளும், பிராந்தியத்தில் அதன் செல்வாக்கை அதிகரிக்கவும், நட்பு நாடுகள் குழுவொன்றை உருவாக்கவும் உதவுகின்றது என ஆசிய பசுபிக் பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்து பார்ப்பவர்களுக்கு இந்து சமுத்திரத்தில் சீனா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு வெறுமனே பொருளாதரா நோக்கம் மாத்திரம் காரணமல்ல என்பது புலனாகின்றது. சில அமெரிக்க ஆய்வாளர்கள் சீனா இந்து சமுத்திரத்தில் பல கடற்படை தளங்களை அமைக்க முயல்கின்றது. இதன்முலம் பிராந்திய கடல்வல்லரசாக உள்ள நாடு சர்வதேச கடல்வல்லரசாக மாறும் என்கின்றனர்.

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் அதற்கு சரியாக பொருந்துகின்றது. இதுவரையில் சீனா மேற்கொண்டுள்ள துறைமுகங்களை அமைக்கும் நடவடிக்கைகளில் இராணுவ தோற்றத்தை காண முடியவில்லை. உதாரணத்திற்கு கொழும்பு போர்ட் சிட்டி திட்டம் என்பது ஆழமான கடலில் பயணிக்கும் கொள்கலன்கப்பல்களுக்கு ஏற்ப உருவாகிவருகின்றது. இந்த வகை கப்பல்களே சீனாவின் பொருளதார பாரத்தை சுமப்பவை.

இதேவேளை கொள்கலன் கப்பல்களுக்காக உருவாக்கப்படும் துறைமுகங்கள் சீனாவின் கடற்படையினருக்கு முக்கியமான உதவியை அளிக்க கூடியவை. இந்த வகை துறைமுகங்களை இரண்டு நோக்கங்களுக்கும் பயன்படுத்தலாம். வர்த்தக நோக்கம் என்பதற்கு பின்னால் இராணுவ நோக்கங்களுக்கும் மறைந்திருக்கின்றன என்கின்றர் ஆய்வாளர்கள்.

கடந்த சில வருடங்களில் சீனாவின் கடற்படை பாரிய வளர்ச்சியை கண்டுள்ளது.எனினும் வெளிநாடொன்றிலிருந்து செயற்படுவதற்கான அதன் திறன் இன்னமும் அதிகரிக்கவில்லை. அமெரிக்கா போன்று அதற்கு துறைமுக வசதிகளை வழங்க கூடிய நாடுகள் இல்லாததே இதற்கு காரணம்.

Idia Chinaஇந்து சமுத்திர பகுதியில் அதற்கு துறைமுகங்கள் இல்லாததே சீனாவின் கடற்படையின் பாரிய பலவீனம் என்பது பல ஆய்வாளர்களாலும் சுட்டிக்காட்டப்படும் ஓரு விடயம். சீனா மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவை மையமாக கொண்ட தனது நீண்ட கால திட்டத்திற்கு உதவக்கூடிய நட்பு நாடுகளையும், உட்கட்டமைப்பு திட்டங்களையும் ஒன்றுசேர்க்கும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.இலங்கையில் சீனா முன்னெடுத்த பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு பின்னரே போர்ட் சிட்டி திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

பல தசாப்தங்காளக சீனா ஆப்கானிஸ்தானிலும், பாக்கிஸ்தானிலும்,நிலக்கரிசுரங்கங்கள், மின்நிலையங்களில் முதலீடு செய்துள்ளது. ஆனால் அவை பூர்த்தியாவதற்கு பல வருடங்களாகின. சீனா பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுக்கபோவதாக அறிவித்த பல நாடுகளில் அதற்கு எதிர்ப்பு உருவானது உண்மை. சீனாவின் ஆதிக்கம் குறித்த அச்சமே அதற்கு காரணம். ஆபிரிக்கா நாடுகள், இலத்தீன் அமெரிக்க நாடுகள்,மற்றும் சில ஆசியா நாடுகளிலும் இவ்வகை உணர்வுகள் காணப்பட்டன,மியன்மார் சீனாவின் ஆதிக்கம் குறித்த அச்சத்தால் பாரிய அணையை அமைக்கும் திட்டத்தை இடைநிறுத்தியது.

சீனா தனது நாட்டிலிருந்து தொலைவில் உள்ள தீவுகளில் முன்னெடுக்கும் திட்டங்கள் ஆழமான நோக்கத்தை கொண்டவை என்கின்றனர். பிராந்தியத்திலும் அமெரிக்காவிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், ஆசியா மற்றும் இந்தோபசுவிக்கின் தரைமற்றும் கடல்தோற்றத்தையும், பாதுகாப்பு கட்டுமானங்களையும்,மிகவும் திட்டமிட்ட முறையில் மாற்றும் தந்திரோபாய திட்டத்தை சீனா முன்னெடுக்கின்றது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

கீத் ஜோன்சன் Foreign Policy சஞ்சிகைக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். தமிழில் மொழிபெயர்த்தவர் அ . ரஜீவன். சுடர் ஒளி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.