செய்திகள்

இன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெறவுள்ள ‘மனதில் நின்றவையும் தெளிந்தவையும்’ நூல் வெளியீடு

பொருளியல் ஆசான் எஸ்.ஸ்ரீராம் எழுதிய ‘மனதில் நின்றவையும் தெளிந்தவையும்’ நூல் வெளியீடு நாளை சனிக்கிழமை(16.5.2015) பிற்பகல் 05.30 மணிக்குக் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு ஜனநாலயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிரதம அதிதியாகவும்,கல்வி அமைச்சின் தமிழ்ப் பாடசாலைகள் அபிவிருத்திப் பணிப்பாளர் எஸ்.முரளிதரன், தேசிய கல்வி நிறுவனத்தின் தெற்காசிய ஆசிரியர் அபிவிருத்தி மையத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எவ்.ரி.அல்பிரட், கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி.கோதை நகுலராஜா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள், நூலகங்கள் இலவசமாகப் பொருளியல் நூல் பிரதிகள் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.நகர் நிருபர்-