செய்திகள்

இன்று சபாநாயகர் கையொப்பம் : டிசம்பரில் தேர்தல் நடக்கும்?

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்தில் இன்று வியாழக்கிழமை சபாநாயகர் கையொப்பமிடவுள்ளதாகவும் இதன்படி விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரினால் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகலாம் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய இணை அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்கவே இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலத்தில் நாளைய தினம் (இன்று) சபாநாயகர் கையொப்பமிடவுள்ளார். இதனை தொடர்ந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரினால் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகலாம். இதன்படி டிசம்பர் 9ஆம் திகதிக்குள் தேர்தல்கள் நடத்தப்படலாம். இல்லையேல் ஜனவரி ஆரம்பத்தில் தேர்தல் நடக்கலாம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)