செய்திகள்

இன்று நள்ளிரவு அல்லது நாளை பாராளுமன்றம் கலையும்?

இன்று அல்லது நாளை பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் மத்திய வங்கி ஆளுனருக்கு எதிராக கொண்டு வந்த யோசனை தொடர்பாக சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்த நிலையில் பாராளுமன்றம் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்ட போதும் நாளைய தினமும் இதே நிலைமை  தொடர வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் பாராளுமன்றத்தை இன்று இரவு அல்லது நாளை கலைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்று இரவு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாகவும் இதன் பின்னர் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.